×

இந்தி மொழியில் இருக்கும் திட்ட பெயர்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்: திமுக எம்எல்ஏ எழிலன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஆயிரம்விளக்கு உறுப்பினர் டாக்டர் எழிலன் (திமுக) பேசியதாவது: இந்த பட்ஜெட் சமூக நீதிக்கான பட்ஜெட்டாக உள்ளது. இந்த பட்ஜெட்டானது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வெறும் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, திமுக சட்டப் போராட்டம் நடத்தி இந்தியாவிலுள்ள அனைத்து பிற்படுத்தப்பட்டோருக்கு உரிமை வாங்கி கொடுத்து அங்கீகாரம் செய்துள்ளது. தமிழ்மொழியை அரசு மொழியாகவும், அலுவல் மொழியாகவும் வழிமுறை செய்துள்ளனர். அது சம்பந்தமாக துறை சார்ந்த அமைச்சருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

பல்வேறு திட்டங்கள் இந்தி மொழியில் இருக்கிறது. பல திட்டங்களின் பெயர்கள் நமக்கு புரியவில்லை. சர்வசிக்‌ஷ அபியான், ஆயுஷ்மான், ஜல்ஜீவன் உள்ளிட்ட பெயர்களில் உள்ளது. அதை தமிழில் மொழி பெயர்ப்பு செய்து கோப்புகளில் இடம்பெறச் செய்யும்படி வலியுறுத்துகிறேன். இன்னொரு கோரிக்கையாக, தென்னாட்டு ஜான்சி ராணி என மகாத்மா காந்தி அடிகளால் பாராட்டப்பட்டு உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கர்ப்பிணி பெண்ணாக கலந்து கொண்டு சிறை சென்று, காங்கிரஸ் உறுப்பினராக இரண்டு முறை சட்டமன்றம் சென்ற கடலூர் அஞ்சலையம்மாளுக்கு அவரது கொள்ளுப் பேரனாக நான் சிலை வைக்க கோரிக்கை வைக்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : DMK ,MLA ,Ezhilan , Hindi Language, Project, Translation, DMK MLA Ezhilan
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா