×

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வேகமாக பரவும் மஞ்சள் காமாலை நோய்!: 50க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வேகமாக பரவும் மஞ்சள் காமாலை நோயால் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களாக மஞ்சள் காமாலை நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். களக்காடு பெரியத்தெரு ஞானசம்பந்தபுரம், சரோஜினிபுரம், கிருஷ்ணன்கோயில் தெரு, தம்பி தோப்பு, எஸ்.என்.பள்ளி வாசல், படலையார் குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே களக்காடு பகுதியில் டிராக்டர்கள் மூலம் தனியார் குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர். இந்த குடிநீரின் மூலமே நோய் பரவியதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே நோய் பரவலை தடுக்க களக்காடு பேரூராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தெருக்களில் கிருமி நாசினி தூவும் பணியும் முடிக்கிவிடப்பட்டுள்ளது. இதேபோல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளும், குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Padelai District Kalakala , Nellai, jaundice
× RELATED சென்னை உள்நாட்டு விமான முனையத்தில்...