விக்னேஷ் சிவனுடன் நிச்சயமாகி விட்டது: நடிகை நயன்தாரா தகவல்

சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நிச்சயமாகி விட்டதாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். சென்னையில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் நடித்த நயன்தாரா, தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்கிறார். தங்களுக்கு ரகசிய திருமணம் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தாலும், இதுவரை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தனி விமானத்தில் கேரளா மற்றும் கோவா சென்று வரும் அவர்களின் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில், தனது படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நயன்தாரா, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்றும், அதற்கான மோதிரத்தை தன் கையில் அணிந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். முதல்முறையாக இப்படி பேசியதன் மூலம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நிச்சயமாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: