மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளது சிபிசிஐடி..!

சென்னை: பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர் பாபாவை மேலும் ஒரு வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கேளம்பாக்கம் அடுத்த சாத்தங்குப்பத்தில் 20 ஆண்டுகளாக இயங்கி வரும் சுசில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி  நிறுவனர் பிரபல நடன சாமியார் சிவசங்கர் பாபா (72).  இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பலர் அதன் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர். 10 மற்றும் 11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பொது தேர்வுக்கு முன்பும், பிற ஆன்மிக நிகழ்வு நாட்களிலும் சிவசங்கர் பாபாவிடம் ஆசிர்வாதம் பெற்றால் நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என்று பள்ளியின் ஆசிரியைகள் கூறி அழைத்து செல்வார்கள்.

அப்போது மாணவிகளை சிவசங்கர் பாபா ஆசிர்வாதம் என்ற பெயரில் தனிதனியாக தனது அந்தரங்க அறைக்கு அழைத்து ெசன்று, அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அறையில் வெளிநாட்டு மதுபானங்கள், சாக்ெலட்டுகளை கொடுத்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததும்தெரிய வந்தது. 15 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட மாணவிகளை சிவசங்கர் பாபா சீரழித்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஏற்கனவே 2 வழக்குகளில் சிவசங்கர் பாபா கைதாகி சிறையில் உள்ளார். சுஷில்ஹரி இண்டர்நேஷனல் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அடுத்தடுத்து போக்சோ வழக்குகள் போடப்பட்டு கைது நடவடிக்கையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் 3-வது போக்சோ வழக்கில் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். 3 வது வழக்கில் கைதான சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.

Related Stories:

More
>