×

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: நாகையில் இருந்து சென்ற மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு..!

நாகப்பட்டினம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா - இலங்கை நாடுகளின் 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தின் ஒரு பகுதியான கச்சத்தீவு, இலங்கைக்கு சொந்தமானது. இதன் பின் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை கேள்விக்குறியானது. தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும்போதெல்லாம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாகையில் இருந்து சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் கலைச்செல்வன் என்ற மீனவர் மீது குண்டு பாய்ந்தது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவர் கலைச்செல்வன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவம்  நாகப்பட்டினம் மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sri Lanka Navy ,Nagu , Sri Lankan Navy atrocities again: Fishermen fired from Naga ..!
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்