×

தமிழகத்திற்கு 2,70,350 கோவிஷீல்டு வருகை

சென்னை: தமிழ்நாட்டிற்கு மேலும் 2,70,350 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 23 பார்சல்களில் மகராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து நேற்று மாலை 3.30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தது. புனேவில் உள்ள ஒன்றிய மருந்து கிடங்கிலிருந்து 2,70,350 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவிக்கப்பட்டு, 23 பார்சல்கள் இண்டிகோ ஏர்லைன்ஸ்  விமானத்தில் ஏற்றப்பட்டு, நேற்று மாலை 3.30 மணிக்கு சென்னை வந்தது. தடுப்பூசி பார்சல்களை பெற்ற தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் அதை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்திற்கு  எடுத்து சென்றனா். அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பிரித்து  அனுப்பப்படும்.

Tags : Govshield ,Tamil Nadu , Covshield, corona, vaccine
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...