மரவள்ளி பயிர்களை தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆய்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தோட்டக்கலை உதவி இயக்குநர் வாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எடுத்தவாய்நத்தம், பரிகம், கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சிறுவங்கூர்,  ஆலத்தூர், கீழ்நாரியப்பனூர், இந்திலி ஆகிய பகுதிகளில் நடவுசெய்யப்பட்டுள்ள மரவள்ளி பயிர்களில் மாவுப்பூச்சி  மற்றும் செம்பேன் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பூச்சி மற்றும் நோய் பாதிப்படைந்த வயலில்  இருந்து விதை மரவள்ளி, கரனை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும்.

மாவுப்பூச்சி பாதிக்கப்பட்ட மரவள்ளி பயிரின் நுனிக்கருத்துகளை  அகற்றுவதாலும், வயல் வரப்பில் உள்ள தேவையற்ற களை செடிகள் மற்றும் கொய்யா,  செம்பருத்தி பப்பாளி ஆகிய செடிகளில் தேவையற்ற கிளைகளை அகற்றுவதன் மூலம்  மரவள்ளி பயிர் மாவுப்பூச்சிகளை பாதிப்பிலிருந்து கட்டுப்படுத்த  முடியும். மாவுப்பூச்சி தாக்குதல் ஆரம்ப நிலையில் இருக்கும்  போது ஒரு லிட்டர் தண்ணீரில் அசாடிராக்டின் 1500 பிபிஎம் என்ற மருந்தினை 500  மில்லி கலந்து தெளித்திடவும். பாதிப்பு அதிகமாக இருப்பின் பின்வரும்  மருந்தினை சுழற்சி முறையில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

Related Stories:

More
>