×

தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி: தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தகவல்

 

ஊட்டி, மார்ச் 12: கோத்தகிரி வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் குருமுடி கிராமத்தில் காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் நடந்தது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை (அட்மா) திட்டத்தின் கீழ் குருமுடி கிராமத்தில் காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் நடந்தது.

தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) அப்ரோஸ் பேகம் தலைமை வகித்து, அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஐஸ்வர்யா, அங்கக வேளாண்மைக்கு தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மண் ஆய்வு கூட வேளாண்மை அலுவலர் விவசாயிகளுக்கு மண் மாதிரி சேகரிப்பு முறைகள், அதன் பயன்கள் குறித்து செயல்முறை விளக்கமளித்தார்.

அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் அட்மா திட்டத்தின் கீழ் பண்ணை பள்ளி பயிற்சியில் நிலம் தயாரிப்பு முதல் அறுவடை வரை 6 மாத பயிற்சிகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் செயல்முறை விளக்கங்கள் குறித்து விளக்கினார். தீனட்டி பகுதியை சேர்ந்த முன்னோடி விவசாயி கணேசன் இயற்கை சாகுபடியில் மண் வளத்தின் பங்கு குறித்து பேசினார். அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

The post தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி: தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Horticulture Department ,Ooty ,Kurumudi village ,Kothagiri District Horticulture Department ,Nilgiri District ,Kotagiri Regional Department of Horticulture and Hill Crops, Agricultural Technology ,Dinakaran ,
× RELATED தமிழகம் மாளிகை பூங்கா பராமரிக்கும் பணி மும்முரம்