×

52% மாணவர்கள் செல்போன்களை கற்றலுக்கு பதில் சாட்டிங்கிற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர் : ஆய்வில் அதிர்ச்சி!!

சென்னை : கற்றலுக்காக 10% மாணவர்கள் மட்டுமே செல்போன் பயன்படுத்துவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் இணையம் மூலம் பிற சாதனங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) சமீபத்தில் ஆய்வு நடத்தியதுநாட்டில் 6 மாநிலங்களில் குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவுகளை தேசிய குழந்தைகள் நல ஆணையம் வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வின்படி, செல்போன் பயன்பாடு மாணவர்களின் கல்வியை பாதித்துள்ளது. கற்றலுக்காக 10% மாணவர்கள் மட்டுமே செல்போன் பயன்படுத்துகின்றனர். 52% மாணவர்கள் செல்போன்களை கற்றலுக்கு பதில் சாட்டிங்கிற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். 10 வயது சிறார்களின் 37.8% பேர் முகநூல், 24.3% பேர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகின்றனர்.8-18 வயது வரையுள்ள மாணவர்களில் 30% பேர் சொந்தமாக செல்போன்கள் வைத்துள்ளனர்.செல்போன் பயன்பாடு காரணமாக 37.15% மாணவர்கள் இடையே கவனச் சிதறல் ஏற்பட்டுள்ளது. 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தனித்தனி ஸ்மார்ட்போன்கள் அதிகம் வைத்துள்ளனர். இருப்பினும், லேப்டாப் மற்றும் டேப்லெட்களைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : செல்போன்
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...