மணலி அருகே 8 லட்சம் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர்:  மணலி அருகே சேலைவாயல் பகுதியில் 8 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது அதை  ஆர்.டி.சேகர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.   மணலி பிரதான சாலை சேலைவாயல் பகுதியை ஒட்டி உள்ள கோவிந்தசாமிதெரு,  முனுசாமி தெரு போன்ற பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தடையில்லாமல் மின் வினியோகம் செய்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம், வியாசர்பாடி மின் கோட்டம் சார்பில் சேலைவாயல் பகுதியில் ரூ. 8 லட்சம் செலவில் புதிய மின் மாற்றி மற்றும் மின் கேபிள்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. பணிகள் முடிவடைந்ததை ஒட்டி இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. செயற்பொறியாளர்  ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார்.

 ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்து தொடங்கி வைத்தார். இந்த புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டதன் மூலம் மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்தம் பிரச்சினைகள் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மாதவரம் உதவி செயற்பொறியாளர் கதிரவன், உதவி பொறியாளர்  கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .

Related Stories:

>