×

ஊட்டி புதுமந்து சாலையில் மழையால் இடிந்து விழுந்த தடுப்புச்சுவர்

ஊட்டி : மழை காரணமாக ஊட்டி புதுமந்து சாலையில் மழை காரணமாக சாலையோர தடுப்புச்சுவர் இடிந்துள்ளது.  தென்மேற்கு பருவ காற்றின் தீவிரம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, மஞ்சூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்யும் சூழலில் மரம் விழுதல், மண்சரிவு போன்ற பெரிய அளவிலான இடர்பாடுகள் ஏற்படவில்லை. கடந்த வாரத்தில் கூடலூர் சாலையில் சில இடங்களில் விழுந்த மரங்களை தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர்.

இந்நிலையில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்து வெயிலான காலநிலை நிலவியது. மதியத்திற்கு பிறகு காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, ஊட்டி - புதுமந்து சாலையில் சாலையோர தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

இதன்காரணமாக, சாலை குறுகியுள்ளதால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, சாலையில் இடிந்து விழுந்துள்ள இடிபாடுகளை அகற்றிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Ooty New Mandu Road , Ooty,Barrier, manjur, cuddalore, rain
× RELATED தருமபுரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7...