×

12 ஆண்டில் இல்லாத அளவுக்கு மும்பையில் மீண்டும் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பை: மும்பை, மும்பை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், மும்பையில் சாந்தாகுரூசில் 253.3 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது. இது, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜூலையில் பெய்த 3வது அதிக மழையாகும். இதற்கு முன் 2009, ஜூலை 15ம் தேதி 274.1 மி.மீ மழையும். 2019, ஜூலை 2ம் தேதி 376.2 மி.மீ மழையும் பெய்துள்ளது. சாந்தாகுரூசில் ஜூலை 1ம் தேதியில் இருந்து நேற்று காலை வரை 1,544.9 மி.மீ மழையும், கொலாபாவில் 1,068.4 மி.மீ மழையும் பெய்துள்ளது.

இதன் காரணமாக, மும்பையில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாகின. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது. மும்பை நகரை விட புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் அதிக மழை பெய்துள்ளது. இதனால்,  மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் ஒன்றான துல்சி ஏரி நிரம்பி வழிகிறது. அந்தேரி, மலாடு, கார்ரோடு உள்ளிட்ட சுரங்கப் பாதைகள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதனால், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது.

Tags : Mumbai , Mumbai, rain, nature life impact
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...