×

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா 100வது பிறந்தநாள்: கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர  போராட்ட வீரருமான என்.சங்கரய்யா நேற்று தனது 100வது பிறந்த நாளை  குரோம்பேட்டை, நியூ காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் எளிமையாக  கொண்டாடினார். இதனையொட்டி, பல்வேறு கட்சி தலைவர்கள் அவருக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சுதந்திரபோராட்ட வீரர் என்.சங்கரய்யாவுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவரை ெதாடர்ந்து,   திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், தமிழக ஊரக  தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி,  எஸ்.ஆர்.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்  செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நிர்வாகிகள்  ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் எம்.பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவர் நல்லகண்ணு, டி.ராஜா எம்.பி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ   உட்பட ஏராளமானோர் சங்கரய்யாவை நேரில் சந்தித்து விற்கு பிறந்தநாள் வாழ்த்து  தெரிவித்தனர். 




Tags : Communist Senior Leader ,Sankaraya , Communist, senior leader, Sankarayya, 100th birthday
× RELATED நங்கநல்லூர் – பழவந்தாங்கல்...