×

முறைகேடு எதிரொலி சென்னையில் ₹250 கோடி டெண்டர்கள் ரத்து; மாநகராட்சி அதிரடி

சென்னை: டெண்டர்களில் வெளிப்படைத் தன்மை, விதிமுறைகளை சரியாக பின்பற்றாத, முறையான திட்டமிடல் இல்லாததால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ₹250 கோடி மதிப்பிலான டெண்டர்களை மாநகராட்சி நிர்வாகம் ரத்து  செய்து உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்தது. ஆட்சி தொடங்கிய நாள் முதல் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இந்த ஆய்வுகளின் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளது. இதில், சாலை, பூங்கா, மழைநீர் வடிகால், சுகாதாரம், கட்டிடம், திடக்கழிவு மேலாண்மை, மின் துறை, நகரமைப்புப் பிரிவு என்று 17 துறைகள் செயல்பட்டு வருகிறது. 


சாலை மேம்பாடு, மழைநீர் வடிகால், பூங்காக்கள் பராமரிப்பு போன்ற பல்வேறு பணிகளுக்கு அந்தந்தத் துறை அளவில் ஒப்பந்தங்கள் கோரப்படும். இந்த துறைகளில் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட பல ஒப்பந்தங்களில், முறையான திட்டமிடல் இல்லாதது, ஒப்பந்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்று 250 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக வங்கியின் நிதி உதவியோடு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அண்ணாநகர், ராயபுரம், அடையாறு உள்ளிட்ட 43 இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கக் கடந்த பிப்ரவரி மாதம் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் முறையான திட்டமிடல் இல்லை என்றும், ₹120 கோடி மதிப்பில் 43 இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் ₹116 கோடி செலவில் 1500 சி.சி.டி.வி கேமராக்களை பொருத்த விடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் சமூக வலைத்தளங்களை நிர்வகிக்க ₹2.3 கோடி மதிப்பில் டெண்டர் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஒப்பந்தமும் அண்மையில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.




Tags : Abuse, Chennai, ₹ 250 crore, tender, cancellation
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...