வாலிபருக்கு கத்தி குத்து சகோதரர்களுக்கு 10 ஆண்டு சிறை: செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரம் அன்னை சத்தியாநகரை சேர்ந்தவர் நரசிம்மன். இவர், சென்னை கிரீன்வேஸ் ரோடு கேசவபெருமாள்புரத்தை சேர்ந்த சதீஷ்(23) என்பவர் மூலம் பைக் வாங்கி உள்ளார். நரசிம்மன் சாலையில் சென்றபோது, வாகன சோதனையில் இருந்த போலீசார், பைக் ஆவணங்களை கேட்டுள்ளனர். அப்போது சதீஷ் மூலம் தான் பைக் வாங்கியதாக போலீசாரிடம் நரசிம்மன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, சதீஷிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதன் காரணமாக நரசிம்மன் மீது சதீசுக்கு விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், நரசிம்மன் கடந்த 9.6.2014 பைக்கில் சென்றபோது சதீஷ், அவரது சகோதரர் பிரகாஷ்(25) வழிமறித்து கத்தியால் குத்தினர். இதுகுறித்து அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த  சென்னை 5வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் பிரகாஷ், சதீஷ் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

Related Stories:

>