×

ஜிகா வைரஸ் தொற்று கண்டறியும் சோதனை மையம் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்பட தொடங்கியது..!!

சென்னை: சென்னை தேனாம்பேட்டை மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குனராக அலுவலக வளாகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்திருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத்துறை முடுக்கிவிட்டுள்ளது. ஜிகா வைரஸை கண்டறிய வழக்கமான எலிசா பரிசோதனையை தொடர்ந்து ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மூலமும் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை நல்வாழ்வுத்துறை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை ஆய்வகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான சோதனை மையம் அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளது. இதுவரை கேரள எல்லைகளை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் 65 இடங்களில் ஏ.டி.எஸ். கொசுக்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் எந்த மாதிரியிலும் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.


Tags : Virus Infection Testing Center ,Chennai ,DMS , Zika Virus Infection, Testing Center, Chennai DMS Campus
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...