×

ஆடி மாத பூஜை சபரிமலை நடை 16ம் தேதி திறப்பு

திருவனந்தபுரம்: கொரோனா பரவலை தொடர்ந்து கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஒன்றரை மாதங்களுக்கு அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில், கடந்த மாதம் 17ம் தேதி முதல் நோய் பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டதால் கோயில்கள், சர்சுகள், மசூதிகள் ஆகிய வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன.  

இந்நிலையில், ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மறுநாள் (17ம் தேதி) முதல், நடை அடைக்கப்படும் 21ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள்  அனுமதிக்கப்படுவார்கள். தினமும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ் அல்லது  2 டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் அனுமதிக்கப்படுவர். ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு எந்த காரணம் ெகாண்டும் அனுமதி கிடையாது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.


Tags : Audi month ,Sabarimala , Audi Month Puja Sabarimala walk Opening on the 16th
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு