×

விழிப்புடன் இருங்கள்: தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்...!

டெல்லி: தினசரி கொரோனா பாதிப்புகளில் 80% நாடு முழுவதும் உள்ள 90 மாவட்டங்களில் பதிவாகிறது என ஒன்றிய சுகாதாரத்துறை இணைச்செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது. நாடு முழுவதும் பதிவாகும் தினசரி கொரோனா பாதிப்புகளில் 50% பாதிப்பு கேரளா, மகாராஷ்டிராவில் பதிவாகிறது. பிரிட்டன், ரஷ்யா, வங்கதேசத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை கவனித்து வருகிறோம் எனவும் கூறினார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வந்தது. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்தியா இயல்பு நிலைக்கு திரும்பி விடுமென மக்கள் ஆறுதல் அடைந்தனர். ஆனால், கடந்த இரு நாட்களாக பாதிப்பும் உயிரிழப்புகளும் அதிகரிப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது. சிம்லா, மணாலி போன்ற சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்திருப்பதால் பாதிப்பு அதிகமாக வாய்ப்பு இருப்பதாக கூறிய மத்திய அரசு, மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றவில்லை என்றால் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த நேரிடுமென எச்சரிக்கை விடுத்தது.

மக்கள் மாஸ்க் இன்றியும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் சுற்றித் திரிவதாக பிரதமர் மோடியும் கவலைத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார். அதாவது, தமிழகத்தில் 12 மாவட்டங்கள், புதுச்சேரியில் 1 மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. கேரளா, மகாராஷ்டிராவிலும் தொற்று அதிகரித்துள்ளது. பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், இரண்டாவது அலையில் இருந்து இந்தியா இன்னும் மீளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu ,Central Health Department , Be vigilant: Corona infection increase in some districts of Tamil Nadu: Central Health Department information ...!
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...