விலை குறைக்கப்பட்டதால் ஆவினுக்கு புதிதாக 2 லட்சம் வாடிக்கையாளர்கள்: அதிகாரிகள் தகவல்

சென்னை: ஆவின் பால் வாங்குவதற்கு மீண்டும் புதிய விண்ணப்பங்களை தர வேண்டும். ஏற்கனவே பால் வாங்க கூடியவர்களும் புதிதாக பால் வாங்க வேண்டும் என வருபவர்களின்  தகவல் விவரங்களை முழுமையாக அளிக்க வேண்டும் என்று ஆவின் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தமிழக முதல்வராக  மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்  என்று அறிவித்தார். இதனால், தனியார் வாடிக்கையாளர்கள், ஆவின் பால் வாங்க ஆரம்பித்தனர். அதனால் தற்போது கூடுதலாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாடிக்கையாளர்கள் ஆவினுக்கு மாறியுள்ளனர். தனியார் பாலை விட ரூ.7 விலை வித்தியாசம் உள்ளது. மேலும், மாதாந்திர அட்டை பயன்படுத்தியும் நிறைய பேர் பால் வாங்குகின்றனர். கடைகளில் பால் வாங்கினாலும் அது மாதாந்திர பால் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கிடைக்காது. எனவே, பால் வாங்குபவர்கள், புதிதாக பால் வாங்க வேண்டும் என்று வருபவர்களின்  தகவல்களை முழுமையாக அளிக்க வேண்டும் என்று புதிய விண்ணப்பத்தை  வழங்கியது. அதில் அனைத்து தகவல்களையும் நிரப்பி தர வேண்டும்.

Related Stories:

More
>