×

ஏடிஎம் மையங்களில் தவறவிடும் வைபை கார்டுகள் மூலம் நூதனமுறையில் திருட்டு: வாலிபர் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு அடுத்த  சின்மயா நகரை சேர்ந்தவர் மனோகர்(32). இவர் கடந்த 1ம் தேதி அண்ணாநகர் துணை ஆணையரிடம் அளித்த புகாரில், கடந்த மாதம் 28ம் தேதி சின்மயா நகரில் உள்ள ஏடிஎம் மையத்தில் எனது வைபை கார்டு மூலம் ரூ.1,500 எடுத்தேன். பின்னர் இயந்திரத்தில் இருந்து வைபை கார்டை எடுக்க மறந்து சென்றுவிட்டேன். அன்றைய தினமே எனது வைபை கார்டு மூலம் ரூ.25 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. என கூறியிருந்தார்.  இந்நிலையில், சைபர் கிரைம் போலீசார் மனோகர் பணம் எடுத்த இடத்தை டிராக் செய்தனர். அதில், கீழ்ப்பாக்கத்தில் பெட்ரோல் பங்க்கில் ஸ்வைப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அங்கு சென்று பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் விசாரித்தனர்.

அதில், அந்த பெட்ரோல் பங்க்குக்கு மர்ம நபர் அடிக்கடி வந்து, `எனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை’ எனக்கூறி மனோகரின் வைபை கார்டு மூலம் தனது பைக்கில் பெட்ரோல் போட்டுக்கொண்டு மீதமுள்ள பணத்தை ரொக்கமாக அவர்களிடம் வாங்கி சென்றது தெரியவந்தது.  இதையடுத்து, நேற்று முன்தினம்  மாலை புரசைவாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன்(39), நகை  பட்டறை ஊழியரை பிடித்து  கோயம்பேடு போலீசில் ஓப்படைத்தனர். விசாரணையில் ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்கள் விட்டு செல்லும் வைபை கார்டுகள் மூலம் ரூ.50 ஆயிரம் வரை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

Tags : ATM, Wi-Fi card, theft: Valipar, arrested
× RELATED சென்னையில் போதை மாத்திரை விற்பனை...