×

டெல்லி சென்று திரும்பிய அமைச்சர் துரைமுருகன் பேட்டி மேகதாது அணை, காவிரி நதிநீர் விவகாரத்தில் நடந்தது என்ன?

சென்னை: டெல்லி சென்று திரும்பிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை, காவிரி நதிநீர் விவகாரம் குறித்து பேட்டியளித்தார். டெல்லியில் மத்திய ஜல்சக்தி துறை மந்திரியை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார். டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு அமைச்சர் துரைமுருகன் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என கர்நாடக அரசு முயற்சிக்கிறது. இது சட்டவிரோதமானது. உச்ச நீதிமன்ற ஆணைக்கு புறம்பானது. எல்லாவற்றையும்மீறி அணை கட்டுவோம் என சொல்கிறார்கள். அணை கட்டுவது தொடர்பாக அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள கமிஷன் அனுமதி அளித்தது நியாயம் தானா என கேட்டேன். அறிக்கை தயார் செய்ய அனுமதி தந்தாலே அணை கட்ட முடியாது. அதை ஒன்றிய அரசு பார்த்து கொண்டு இருக்காது என ஒன்றிய அமைச்சர் தைரியமாக சொன்னார்.

மார்க்கண்டேய அணை கட்டுவது குறித்து உச்ச நீதிமன்றம் சென்றபோது நடுவர் மன்றம் அமைத்து கொள்ளுங்கள் என தெரிவித்தது. கடந்த 2 ஆண்டுகளாக நடுவர் மன்றம் அமைப்பதில் மத்திய அரசுக்கு என்ன தயக்கம் என்று கேட்டேன். உடனே நீர்வளத்துறை அதிகாரிகளிடம் நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று கூறினார். காவிரியில் இருந்து ஜுலை மாதம் 30 டி.எம்.சியும் ஜுன் மாதம் 19 டி.எம்.சி.யும் வந்து இருக்க வேண்டும். ஆனால் 2 மாதத்தில் தமிழகத்திற்கு 5.67 டி.எம்.சி. தான் கிடைத்து உள்ளது. இதுபற்றி யாரிடமும் முறையீடுவது. மத்திய அமைச்சரிடம் சொல்லலாம். அல்லது காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திடம் முறையிட வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 3 மாதமாகியும் ஆணையத்திற்கு ஒரு தலைவர் போடப்படவில்லை. ஆணையத்திற்கு தலைவர் நியமிப்பதில் என்ன தடை என்றேன். நியாயத்தை உணர்ந்து உடனடியாக ஆணைய தலைவரை நியமிக்க உத்தரவிட்டுள்ளார். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பிரச்னைகளை புரிந்து வைத்து விரிவாக பேசினார். அவருடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமானது.

முல்லை-பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றம் பேபி அணை கட்டினால் 152 அடி வரை தண்ணீரை நிறுத்தலாம் என்றது. பேபி அணை கட்டச்சென்றால் 15 மரங்கள் இருக்கிறது. அந்த மரங்களை அகற்ற கேரள அரசு அனுமதிக்கவில்லை. சாலையை போடவும் விடவில்லை. இது பற்றி கேட்டோம். இது பற்றி கேரளா அரசுடன் பேசுவதாக தெரிவித்தார். கோதாவரி-குண்டாறு அணை இணைப்புக்கு திட்ட அறிக்கை தயாரித்து கையில் வைத்து உள்ளீர்கள். கோதாவரியில் இருந்து கிருஷ்ணா, கிருஷ்ணாவில் இருந்து பென்னாறு, பென்னாறில் இருந்து பாலாறு, பாலாற்றில் இருந்து காவிரி, காவிரியில் இருந்து குண்டாறு என பல கட்டங்கள் உள்ளது. இதில் காவிரியில் இருந்து குண்டாறு வரை பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அதற்கு நிதி கேட்டுள்ளேன் என்றார்.

Tags : Minister ,Duraimurugan ,Delhi ,Megha Dadu Dam ,Cauvery , Interview with Minister Duraimurugan on his return to Delhi What happened to the Megha Dadu Dam and the Cauvery River?
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...