×

மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தடுப்போம் : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

சென்னை : மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த ஒரு இடத்திலோ அணைக்கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் நிறுத்துவதற்கு சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை பிரச்சனைக் குறித்து மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கைக்கு மாண்புமிகு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் திரு துரைமுருகன் அவர்கள் அளித்த பதில் அறிக்கை.

காவேரி ஆற்றின் குறுக்கே  மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை சட்டத்திற்குட்பட்டு கர்நாடகா செயல்படுத்தும் என்று கர்நாடகா முதலமைச்சர் திரு எடியூரப்பா அவர்கள் தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களுக்கு அறிக்கை வழங்கியுள்ளார். இந்நிலையில், மேகதாது பிரச்சனைக் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜீலை 4-ஆம் தேதி கர்நாடக முதலமைச்சருக்கு எழுதிய பதில் கடிதத்தில் தமிழ்நாடு விவசாயிகள்  இலட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை மற்றும் சம்பா நெல் பயிர் செய்வதற்கு காவேரி நீரையே நம்பியிருக்கும் நிலையில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மேகதாது அணை திட்டத்தை கர்நாடகா அரசு கைவிட வேண்டும். அதை செயல்படுத்தக் கூடாது என கடுமையாக வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திட மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த ஒரு இடத்திலோ அணைக்கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதோடு, அதை தடுத்து நிறுத்துவதற்கு சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்.இவ்வாறு தனது அறிக்கையில் மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.



Tags : Karnataka government ,Meghadau , அமைச்சர் துரைமுருகன்
× RELATED தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில்...