×

நவ. 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா: விதிமுறையை வெளியிட்டார் ஒன்றிய அமைச்சர்

புதுடெல்லி: வரும் நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான விதிமுறைகள் மற்றும் போஸ்டரை ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். ஆசியாவின் பழமையான திரைப்பட விழாக்களில் ஒன்றும், இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவுமான இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 52வது பதிப்பு, 51வது பதிப்பின் வெற்றியின் கலப்பு முறையிலான விழா நடைபெறுகிறது.

இந்த விழா ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திரைப்பட விழாக்களின் இயக்குனரகத்தால் நடத்தப்படுகிறது. சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தால், இந்திய சர்வதேச திரைப்பட விழா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரை படைப்புகளை ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் இந்த விழாவானது, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து சிறந்த திரைப்படங்களை திரையிடுகிறது. அதனால், 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் போட்டி பிரிவில் கலந்து கொள்வதற்காக வரும் ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம்.

வரும் நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடைபெறவுள்ள 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான விதிமுறைகள் மற்றும் போஸ்டரை ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். திரைத்துறையில் சிறந்து விளங்கியதற்கான சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது, இந்த வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Indian International Film Festival ,Goa ,Union Minister , Nov. Indian International Film Festival in Goa from 20th to 28th: Union Minister announces rules
× RELATED கோவையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ரோடு ஷோ பிசுபிசுத்தது!