×

யூ-டியூப்பில் பொறி பறக்கவிட்ட 52 கஜ் கா தாமன் பாடல்!: ஒரு ஆண்டுக்குள் 100 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை..!!

டெல்லி: யூ டியூப்பில் அரியான்வி என்ற மொழியில் தனிப்பாடல் ஒன்று வெளியாகி ஒரு ஆண்டுக்குள் 100 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அரியானா மாநிலத்தில் ஒரு கோடி பேர் மட்டுமே பேசும் அரியான்வி என்ற தனித்த எழுத்துவடிவம் இல்லாத மொழியில் 52 கஜ் கா தாமன் என்ற தனிப்பாடல் கடந்த அக்டோபர் மாதம் யூ டியூப்பில் வெளியானது. 19 வயதான ரேணுகா பன்வார் என்ற இளம்பெண் பாடிய இந்த பாடல் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பாடல் வெளியாகி 9 மாதங்களிலேயே 100 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதனை கேட்டு ரசித்துள்ளனர். இந்த பாடலுக்கு முகேஷ் ஜாஜி என்பவர் இசை அமைத்துள்ளனர். இந்த பாடலின் இசை மற்றும் பாடியவரின் குரலை தாண்டி வீடியோ காட்சிகளும் கண்ணை கவரும் வகையில் அமைந்திருந்தது ரசிகர்களை கவர்வதற்கு கூடுதல் காரணமாகும். இந்தியாவிலேயே தனிப்பாடல் ஒன்று 100 கோடி பார்வையாளர்களை கடந்தது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Kaj Ka Taman ,U , U-Tube, Gaj Ka Daman song, 100 crore viewers, record
× RELATED கன்வார் யாத்திரை விவகாரம்: கடைகளின்...