×

அண்ணா சாலையில் கார்களை நிறுத்தி கால்டாக்சி டிரைவர்கள் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு

சென்னை: ஓலா, ஊபர் நிறுவனங்களில் ஒப்பந்த முறையில் கார் இயக்கும் டாக்சி டிரைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே ேநற்று காலை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது, 50க்கும் மேற்பட்ட டிரைவர்கள் தங்களது கார்களை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து எல்ஐசி சிக்னல் வரை வரிசையாக நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அண்ணாசாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அப்போது கார் டிரைவர்கள், ஓலா, ஊபர் நிறுவனங்கள் கடந்த 2014ம் ஆண்டு முதல் மீட்டர் கட்டணத்தை உயர்த்தவில்லை. எங்களிடம் இந்த நிறுவனங்கள் அதிக கமிஷன்  வசூலித்து வருகிறது. எனவே தமிழக அரசு எங்கள் பிரச்னையில் தலையிட்டு புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் கோஷமிட்டபடி சாலையின் இடையே அமர்ந்தனர்.

தகவலறிந்து வந்த திருவல்லிக்கேணி துணை கமிஷனர் மற்றும் உதவி கமிஷனர், போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைதொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அண்ணாசாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசாரின் தடையை மீறி கார்களை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஓலா, ஊபர் நிறுவன ஒப்பந்த கார் ஓட்டுனர்கள் 50க்கும் மேற்பட்டோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அண்ணாசாலையில் போக்குவரத்து இடையூறாக நிறுத்திய கார்களையும் பறிமுதல் செய்தனர்.


Tags : Caltaxi ,Anna Road , Caltaxi drivers protest by parking cars on Anna Road: Traffic damage
× RELATED நீதிபதி குடியிருப்புக்குள் செல்ல...