×

சிவகங்கையில் அரசு சட்ட கல்லூரி, வேளாண் கல்லூரி.. முதல்வர் ஸ்டாலினிடம் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் கோரிக்கை

சென்னை:முதல்வர் மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம் இன்று காலை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக நடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடம் நடைபெற்றது.

இதுகுறித்து ப.சிதம்பரம் கூறும்போது, மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்து பேசியதாக கூறினார்.இந்த சந்திப்பின் போது ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் உடனிருந்தார்.அப்போது தொகுதி வளர்ச்சி திட்டத்துக்கான மனுவையும் முதல்வரிடம் வழங்கினார்.இந்த சந்திப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் @PChidambaram_சிவகங்கை MP @KartiPC தமிழ்நாடு@CMOTamilnadu @mkstalin அவர்களை சந்தித்து சிவகங்கையில் அரசு சட்டக் கல்லூரியும், கானாடுகாத்தானில்  வேளாண்மைக்கல்லூரியும் அமைக்க கோரிக்கை விடுத்தனர். இதனை பரிசீலனை செய்வதாக முதல்வர் உறுதியளித்தார்.

Tags : Government Law College ,Sivanganadah ,College of Agriculture ,CM ,Stalin ,CATTARI ,KARTI CATTTER , சிவகங்கை
× RELATED சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம்...