×

2வது கட்டமாக அமெரிக்கா 5.5 கோடி தடுப்பூசி விநியோகம்

புதுடெல்லி: அமெரிக்கா தங்களது சொந்த பயன்பாட்டுக்கு போக மீதமுள்ள 8 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை பிற நாடுகளுக்கு வழங்க இருப்பதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.  முதல்கட்டமாக 2.5 கோடி கொரோனா தடுப்பூசிவிநியோகம் தொடங்கி உள்ளது. இந்நிலையில் 2வது கட்டமாக 5.5 கோடி தடுப்பூசிகளை வழங்க இருப்பதாக அதிபர் பைடன் தெரிவித்தார். இதில் 1.6 கோடி தடுப்பூசி இந்தியா, இலங்கைஉள்ளிட்ட 18 நாடுகளுக்கு அனுப்பி  வைக்கப்பட உள்ளது.



Tags : Phase 2 US 5.5 crore vaccine distribution
× RELATED கர்நாடகத்துக்கு வறட்சி நிவாரணம் ரூ.3454...