×

ஊரடங்கு தளர்வு காரணமாக ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்பட தொடங்கியது: ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே சேவை

சென்னை: தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர் தென்காசி ஜவஹர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: டெல்லியில் உள்ள சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், தகுதிசான்று, பர்மிட் (அனைத்து வகை), ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு போன்றவற்றின் செல்லுபடியாகும் காலம் கொரோனா ஊரடங்கு காரணமாக ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழக அரசு பிறப்பித்த மற்றொரு உத்தரவில், ‘முழு ஊரடங்கு 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்கள் 30 சதவீத ஊழியர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.  

இதையடுத்து, பின்வரும் வழிமுறைகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, ‘அரசின் உத்தரவுப்படி அனைத்து அலுவலகங்களும் 30 சதவீத ஊழியர்களுடன் இயங்க வேண்டும். ஆட்டோமொபைல் விற்பனையாளர்களின் விற்பனை மற்றும் சேவை பிரிவுகள் (நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள்) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதால், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அந்தந்த ஆர்டிஓக்கள் மற்றும் பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. எனவே ஓட்டுனர் உரிமம் தொடர்பான சேவைகளில், சமூக இடைவெளி மற்றும் கோவிட் - 19 தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றும் வகையில், ‘ஒவ்வொரு அலுவலகங்களிலும் எல்எல்ஆர்-15 ஸ்லாட், டிரைவிங் டெஸ்ட்-15 ஸ்லாட், லைசென்ஸ் புதுப்பிப்பு மற்றும் இதர பணிகளுக்கு-20 ஸ்லாட் என மொத்தம் ஒருநாளைக்கு 50 ஸ்லாட் மட்டுமே வழங்க வேண்டும். 


Tags : RTO , RTO offices started functioning due to curfew relaxation: service to only 50 people per day
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...