×

மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கொரோனா விழிப்புணர்வு கையேடு: அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்

சென்னை: கொரோனா பரவலை தடுக்க மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பான கொரோனா-19 கையேட்டினை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார். தொடர்ந்து, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்து சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியவர்களை கண்காணிக்க சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி ஆலோசனை வழங்கும் திட்டத்தையும்  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் துவக்கி வைத்தார். கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனைத்து விவரங்களும் அடங்கிய இந்த கையேடு 16 பக்கங்களில் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதில் எவ்விதமான நோய் அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், பரிசோதனை செய்யும் இடங்கள், கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், வீட்டில் நோய்த்தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், கண்காணிக்க வேண்டிய அபாய அறிகுறிகள், ஆக்சிஜன் அளவு குறைந்தால் உடனடியாக எடுக்க வேண்டிய முதலுதவி, வீட்டில் தனிமை படுத்தப்பட்டவர்கள் பயன்படுத்திய கழிவுகள் அகற்றும் முறைகள், தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் போன்றவை இடம்பெற்றுள்ளன. உளவியல் ஆலோசனைகள் தேவைப்படுவோருக்கு தொலைபேசி வழியாக மனநல மருத்துவர்களிடம் ஆலோசனை வழங்கப்படும்.  

உணவு தொடர்பாக சந்தேகங்களுக்கு உணவியல் நிபுணரிடம் தொடர்பு கொண்டு ஆரோக்கியம் மற்றும் சத்தான உணவுகள் குறித்த ஐயங்களை கேட்டறிந்து கொள்ளலாம்.  94980 15100, 94980 15200, 94980 15300, 94980 15400 என்ற எண்களில் இருந்து கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படும்.  கொரோனாவிற்கு பிறகான அறிகுறி உள்ள நபர்கள் சென்னை மாநகராட்சியின் தகவல் தொடர்பு மையத்தின் GCC Vidmed என்ற செயலி மூலமும், 94983 46510, 94983 46511, 94983 46512 , 94983 46513 , 94983 46514 என்ற எண்ணிலுள்ள வாட்ஸ்அப் எண்களில் வீடியோ மூலம் தொடர்பு கொள்ளலாம்.  மேலும் உளவியல் தொடர்பாக 044-4612 2300 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு ஆலோசனைபெற்றுக் கொள்ளலாம்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய கொரோனா-19 கையேடு களப்பணியாளர்கள் மூலம் இன்று முதல் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படவுள்ளது.  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Minister ,KN Nehru , Corona Awareness Guide on the steps to be followed by the people: Minister KN Nehru released
× RELATED தொடர்ந்து தமிழகத்திற்கு வரும்...