×

மேட்டூர் அணை நாளை திறப்பு: திருச்சி, தஞ்சையில் தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருச்சி: திருச்சி, தஞ்சையில் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். மேட்டூர் அணை நாளை திறக்கப்படவுள்ள நிலையில் திருச்சி, தஞ்சை டெல்டா பகுதியில் இன்று முதல்வர் ஆய்வு நடத்துகிறார். காலை 10.30 மணிக்கு திருச்சி கல்லணையில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்கிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் திருச்சி வருகிறார். இந்நிலையில் காா் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு செல்லும் மு.க.ஸ்டாலின் அங்கு கல்லணை கால்வாய் நவீனப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். 


மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை பகுதி வரை தடையின்றி செல்வதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை முடித்து விட்டு மு.க.ஸ்டாலின் மீண்டும் திருச்சி வருகிறார். திருச்சியை அடுத்த குழுமணி அருகே உய்யகொண்டான் வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் கொடிங்கால் வாய்க்காலின் தலைப்பு பகுதி புலிவலம் மணல் போக்கியிலிருந்து 280 மீட்டர் தூரத்திற்கு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார். 



Tags : Dharwarwara ,Tiruchi ,Thanjab ,Tamil ,Stalin , Mettur Dam, Opening, Trichy, Thanjavur, Study, MK Stalin
× RELATED நிதி நிறுவனம் நடத்தி ரூ8 கோடி மோசடி: நிறுவனத் தலைவர் கைது