×

திண்டுக்கல்லில் கடன் தவணையை உடனடியாக செலுத்த நிதி நிறுவனங்கள் நிர்பந்தம்!: செய்வதறியாது திகைக்கும் பொதுமக்கள்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தனியார் நிதி நிறுவனத்தினர்  கடன் தவணையை உடனடியாக செலுத்த நிர்பந்தம் செய்வதாக கூறி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் சுற்றுவட்டார மக்கள் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து அவர்கள் தவணை தொகையை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் நிதி நிறுவனத்தினர் உடனடியாக கடனை திருப்பி செலுத்த வலியுறுத்தி தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 


கடன் தவணையை கூடுதல் வட்டியின்றி திரும்ப செலுத்த குறைந்தபட்சம் 3 மாத காலம் அவகாசம் பெற்று தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடன் வசூலிப்பவர்கள் கண்ணியமாக நடந்துகொள்ள அரசு உத்தரவிட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தற்போது கொரோனா தொற்று அச்சம் காரணமாக முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் அனைத்து தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. 


முழு ஊரடங்கினால் பொதுமக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு காலத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் தவணையை செலுத்துவதற்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  தமிழக முதல்வர் ஸ்டாலின் வங்கிகள் நிதி நிறுவனங்கள் கடன் தவணை தொகை செலுத்த யாரையும் நிர்பந்தம் செய்யக்கூடாது என அறிவுறுத்தினார். ஆனால் அதையும் மீறி  நிதி நிறுவனத்தினர்  கடன் தவணையை செலுத்தும்படி நிர்பந்தம் செய்து வருவதாக பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 



Tags : Dindigul , Dindigul, loan installments, financial institutions
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...