×

தமிழகத்தில் உள்ள 11 வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்கம்: தென் முனையமாக தாம்பரம் மாறுகிறது

சென்னை: தமிழகத்தில் உள்ள 11 வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் இயக்கப்படும். தனியார் ரயில்களின் தெற்கு முனையமாக தாம்பரம்  ரயில் நிலையத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில், 100 வழித்தடங்களில், 150 தனியார் ரயில்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கன்னியாகுமரி, நெல்லை, மும்பை, மங்களூர், செகந்தராபாத், டெல்லி உள்பட 11 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளதால் கட்டண நிர்ணயம் மற்றும் ரயில் நிலையங்கள் பராமரிப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ரயில் நிலையங்கள் அருகில் உள்ள நிலங்கள் ஒதுக்குவது ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் இந்த வழித்தடங்களில் ரயில்களை இயக்குவதற்காக தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்ட நிலையில் 10 முன்னணி நிறுவனங்கள் முன் வந்துள்ளன. மேலும் சென்னை பகுதியை மையமாக வைத்து 11 தனியார் ரயில்கள் இயக்கப்படுவதால் தனியார் ரயில்களின் தெற்கு முனையமாக தாம்பரம் ரயில்நிலையம் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைப்போன்று தண்டையார்பேட்டையில் ரயில் பராமரிப்புக்கான பணிமனையாக மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தனியார் ரயில் திட்ட மதிப்பீடு ரூ.3,221 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Tamil Nadu ,Tamaram ,South Terminal , Private trains run on 11 routes in Tamil Nadu: Tambaram becomes the southern terminal
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...