×

துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது” ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சரால், சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ₹5 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் அடங்கும்.  தமிழ்நாட்டை சேர்ந்த,  துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த  பெண் விண்ணப்பதாரர் மட்டுமே விருது பெற  தகுதியுள்ளவர். 2021ம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவர குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ அரசு செயலாளர், பொதுத்துறை, தலைமை செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு வருகிற 30ம் தேதிக்கு முன்பாக அனுப்பிவைக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.  விருதுபெற தகுதியுள்ளவர்,  இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட  தேர்வு குழுவால்  தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Women can apply for Kalpana Chawla Award for Bravery and Heroic Adventure: Government of Tamil Nadu Announcement
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...