1 மாதம் பரோல் கேட்டு நளினி, முருகன் மனு

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், முருகன் தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு காரியம் நடத்த 30 நாள் பரோல் கேட்டு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதியிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு அளித்தார். அதேபோல் மாமனாரின் நினைவு காரிய நிகழ்ச்சியில் பங்கேற்க 30 நாள் பரோல் கேட்டு நளினியும் மனு அளித்திருந்தார். மனுக்களை டிஐஜி ஜெயபாரதி நிராகரித்தார்.

இதற்கிடையில், நளினியின் தாய் பத்மா (81) உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவரை கவனித்துக்கொள்ளவும், இலங்கையில் மரணமடைந்த மாமனார் வெற்றிவேலின் ஓராண்டு நினைவு காரியங்கள் செய்யவும் 30 நாள் பரோல் கேட்டு நேற்று, நளினி முதல்வர் மற்றும் உள்துறை செயலாளருக்கு மனு  அளித்துள்ளார். அதேபோல், முருகனும் 30 நாள் பரோல் கேட்டு சிறை கண்காணிப்பாளர் மூலம் முதல்வர் மற்றும் உள்துறை செயலாளருக்கு மனு அளித்துள்ளார்.

Related Stories: