×

தஞ்சையில் 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: திருச்சியில் 6 பேருக்கு அறிகுறி

திருச்சி: கொரோனா அச்சத்திற்கு இடையே தஞ்சையில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவியுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை (மியூகோர்மைகோசிஸ்) என்ற நோய் பாதித்து “வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியபோல்” மீண்டும் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இதன்படி, இந்தியாவில் இதுவரை 8,848 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 40 பேர் இந்த தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் 4 ஆண்கள், ஒரு பெண் உள்பட 5 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அரசு மருத்துவமனையில் 2 பேரும், தனியார் மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 5 பேரும் நலமுடன் உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், திருச்சி அரசு மருத்துவமனையில் 6 பேர் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் அனுமதிக்கபட்டுள்ளனர். இவர்களின் மாதிரி சோதனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், முடிவு நாளை (இன்று) தான் தெரிய வரும் என்று மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

பெண் மருந்தாளுனருக்கு கண் பாதிப்பு
மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி மீனா (45). சீர்காழி கூட்டுறவு மருந்துக்கடை மருந்தாளுநரான இவர், கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது இடது கண்ணில் பார்வை குறைவுடன் வலி ஏற்பட்டுள்ளது. பரிசோதனை செய்ததில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. தற்போது மீனா சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மீனாவுக்கு இடது கண் அகற்றப்பட்டுள்ளது.



Tags : Tangeram ,Tiruchi , Black fungal infection in 5 people in Tanjore: Symptoms in 6 people in Trichy
× RELATED மணல் திருடியவருக்கு போலீசார் வலை