கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒருமாத ஊதியம் வழங்கினார் வைகோ: 4 எம்எல்ஏக்களும் வழங்குகின்றனர்

சென்னை,: மதிமுக  தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசு மேற்கொண்டு வருகிற கொரோனா தடுப்புப் பணிகளுக்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமது நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிற்கான ஒரு மாத ஊதியத்துடன் மேலும்  சேர்த்து, ரூ.2 லட்சம் நிதியாக, வழங்கினார். அதற்கான காசோலை, முதல்வரின் செயலர் உமாநாத் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இதேபோல், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவர்.

Related Stories:

>