இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் பொறுப்பேற்பு

சென்னை: தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநராக இருந்த ராஜாமணி, அறநிலையத்துறை ஆணையராக (கூடுதல் பொறுப்பு)  கடந்த 23ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, அவர் 26ம் தேதி அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, பல்வேறு துறைகளில் செயல்படாமல் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அறநிலையத்துறை கமிஷனர் ராஜாமணி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சிப்காட் நிறுவன மேலாண்ைம இயக்குனர் குமரகுருபரன் அறநிலையத்துறை ஆணையராக நியமனம் செய்து நேற்று முன்தினம் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்ட குமரகுருபரன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அவர் அறநிலையத்துறையின் அதிகாரிகளிடம் துறை சார்ந்த நிகழ்வுகள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிலையில் அறநிலையத்துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ள குமரகுருபரன் பதிவுத்துறை ஐஜியாகவும், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அறநிலையத்துறையில் கடந்த 5 ஆண்டுகளாக 14 துணை ஆணையர் பணியிடங்கள் காலியாகவுள்ளது. அதே போன்று கடந்த அரசால் அறிவிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்கள் 2 ஆயிரம் பேர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளது. 103 காலி செயல் அலுவலர் பணியிடங்களும் அறிவிப்போடு நிற்கிறது. ஏற்கனவே, உள்ள காலி பணியிடங்களும் நிரப்பாமல் உள்ளனர். இந்த விவகாரத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனர் குமரகுருபரன் துரிதமாக செயல்பட்டு ஊழியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Related Stories: