மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: இங்கிலாந்தைச் சேர்ந்த ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் எனும் செவிலியர், போர்க்களத்தில் காயம்பட்ட வீரர்களுக்குச் சிகிச்சை அளித்து தாய்மனதிற்குரிய பரிவுகாட்டியவர்.   அவரைச் சிறப்பித்து - செவிலியர் அனைவரின் பணியையும் போற்றிடும் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.  

கொரோனா பேரிடர் காலமும் போர்க்களத்திற்கு இணையானதுதான்.  இதில் முன்கள வீரர்களாகக் கடமையாற்றும் இருபால் செவிலியர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு போர்க்கால  அடிப்படையில் மேற்கொள்ளும் பேரிடர் காலப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் துணைநிற்கும் செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் என்பதைத் தெரிவித்து, தன்னுயிர் கருதாது மன்னுயிர் காக்கும் செவிலியர்களை  வாழ்த்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>