தென்னிந்திய நடிகர் சங்க விவகாரம் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விஷால் கோரிக்கை

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து சொன்னார் நடிகர் விஷால். தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளராக பதவி வகித்தவர் அவர். நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடந்து இதுவரை வாக்குகள் எண்ணப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் முதல்வரை சந்தித்துள்ள விஷால் கூறியதாவது: முதல்வரை சந்தித்து வாழ்த்து சொன்னேன். பிறகு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இன்றைய நிலமை குறித்து விளக்கினேன். நடிகர் சங்கம் முடக்கப்பட்டு இருப்பதால், ஏராளமான கலைஞர்கள் பென்ஷன் கிடைக்காமல், மருந்து வாங்கக்கூட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் சொன்னேன்.

இன்றைய சூழலில் கொரோனாவில் இருந்து முதலில் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு கண்டிப்பாக நடிகர் சங்கத்துக்கான விஷயங்களை செய்து கொடுக்கிறேன் என்று முதல்வர் உறுதி அளித்தார். அதிக கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பிறகு முதன்முதலாக போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏ ஆன உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்த்து சொன்னேன். இவ்வாறு விஷால் தெரிவித்தார். இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் முதல்வர் மு.க. ஸ்டாலினை வாழ்த்தியுள்ளார்.

Related Stories:

More