சென்னையில் 93.57க்கு விற்பனை: பெட்ரோல், டீசல் விலை 4வது நாளாக அதிகரிப்பு: ராஜஸ்தானில் 102ஐ தாண்டியது

சேலம்: பெட்ரோல், டீசல் விலை நேற்று தொடர்ந்து 4வது நாளாக அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை முறையே 93.15, 86.65க்கும், சேலத்தில் 93.57, 87.09க்கும் விற்கப்பட்டது.  5 மாநில தேர்தல் காரணமாக மாற்றமின்றி நீடித்து வந்த பெட்ரோல் டீசல் விலை, மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. கடந்த 4ம் தேதி முதல் நேற்று (7ம் தேதி) வரை தொடர்ந்து 4 நாட்கள் விலையை அதிகரித்துள்ளனர். நேற்று நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு 23 முதல் 25 காசும், டீசல் லிட்டருக்கு 27 முதல் 30 காசும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 25 காசு உயர்ந்து 93.15க்கும், டீசல் 30 காசு உயர்ந்து 86.65க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுபோல் சேலத்தில் பெட்ரோல் 24 காசு அதிகரித்து 93.57க்கும், டீசல் 29 காசு அதிகரித்து 87.09க்கும் விற்பனையானது. இந்த 4 நாளில் மட்டும் பெட்ரோல் 77 காசும், டீசல் 85 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் பெட்ரோல் லிட்டர் 102ஐ எட்டியுள்ளது. அதாவது ராஜஸ்தான் ஸ்ரீகங்கா நகரில் பெட்ரோல் 102.15 எனவும், மத்திய பிரதேசத்தில் 101.86 ஆகவும், மகாராஷ்ரா மாநிலம் பர்பானியில் 99.95 ஆகவும் உயர்ந்துள்ளது. வரும் நாட்களிலும் விலை உயரும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

>