என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த 620 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம்

சென்னை: என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த 620 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்த 5 ஆயிரம் தொழிலாளர்களை தற்பொழுது  மாநில அரசால் நிர்வகிகப்பட்டு  கூட்டுறவு துறையின் மூலம் செயல்பட்டு வருகிற இண்டஸ்டரியல் கோஆப்ரேட்டிவ் சொசைட்டியில்  பணிபுரிந்து வருகிற 620 தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள்.

620 தொழிலாளர்களின் பணி நிரந்தர ஆணை என்.எல்.சி நிர்வாகத்தால் நேற்று (6.5.2021) வெளியிடப்பட்டு 620 தொழிலாளர்களும் பணியில் சேர்வதற்கான பணி நிரந்தர ஆணையும் கையோடு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 130  தொழிலாளர்களின் சிறு சிறு குறைபாடுகள் சரி செய்யப்பட்டு விரைவில் அவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: