×

விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு; ரூ. 1.75 கோடி  நஷ்ட ஈடு வழங்க நீதிமன்ற உத்தரவு

கடலூர்: கடலூரில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த என்எல்சி தனி அலுவலர் குடும்பத்திற்கு ரூபாய் 1.75 கோடி நஷ்ட ஈடாக வழங்க சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் ஆனைகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நம்பிக்கை வாசன் மகன் சேகர்( 57). என்எல்சியில் தனி அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த 24/ 10/ 2020 அன்று தனது இரு சக்கர வாகனத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து இறந்த என்எல்சி தனி அலுவலர் சேகர் மனைவி பவானி, மகள் சேஷலட்சுமி, தாயார் சரோஜா ஆகியோர் கடலூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் என் 1ல். வழக்கு தாக்கல் செய்து  நஷ்டஈடு வழக்கு தொடரப்பட்டது .மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், உஷாராணி, கலையரசன் ஆஜராகினர் .வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண் 1 நீதிபதி ஆனந்தன் இறந்த என்எல்சி தனி அலுவலர் சேகர் அவர்தன் குடும்பத்திற்கு  நஷ்டஈடாக ரூ.1.31,44,000/-ம் அதற்கான வட்டியுடன் சேர்த்து ரூ.1,75,00,000/-ம் ரூபாய் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்த உத்தரவிட்டார்.

The post விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு; ரூ. 1.75 கோடி  நஷ்ட ஈடு வழங்க நீதிமன்ற உத்தரவு appeared first on Dinakaran.

Tags : NLC ,Cuddalore ,Namki Vasan ,Sekar ,Cuddalore Aanaikupam ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...