×

கொரோனா தொற்றால் எஸ்ஐ, ஏட்டு பரிதாப பலி

சென்னை: வேலூர் மாவட்டம் சேனூர் பகுதியை சேர்ந்தவர் சின்னக்கன்னு(55). சென்னை பாதுகாப்பு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 28ம் தேதி கொரோனா தொற்று காரணமாக ராஜிவ் காந்தி அரசு பொது  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை சின்னக்கன்னு உயிரிழந்தார். உயிரிழந்த உதவி ஆய்வாளருக்கு மணிமொழி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள்  உள்ளனர். உதவி ஆய்வாளர் உடலை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனைப்படி சொந்த ஊரான சேனூரில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

இதேபோல், சென்னை ஆயுதப்படை தலைமை காவலராக கமலநாதன்(44) பணியாற்றி வந்தார். இவர் முன்னாள் டிஜிபி ஜாபர் சேட்டின் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். தமிழக காவல் துறையில் கடந்த 1999ம் ஆண்டு பணியில் சேர்ந்த கமலநாதன் ஆயுதப்படையிலேயே தனது பணியை செய்து வந்தார். கடந்த மாதம் 25ம் தேதி கமலநாதனக்கு காய்ச்சல் காரணமாக பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது. தொடர்ந்து கமலநாதன் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும், ராஜரத்தினம் மைதானத்தில் உயிரிழந்த ஆயுதப்படை தலைமை காவலர் கமலநாதனின் திருவுருவ படத்திற்கு உயர் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை காலவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

Tags : Corona infection kills SI, eight miserable
× RELATED சிலந்தி ஆறு, மேகதாதுவில் தடுப்பணை...