×

அதிராம்பட்டினத்தில் வரிமட்டி சீசன் துவக்கம்: ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் கடலோர பகுதிகளில் வரிமட்டி சீசன் துவங்கி உள்ளது. ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடல் பகுதி சேறு மற்றும் மணல் கலந்த பகுதியாகும். இதனால் தற்போது வரிமட்டி சீசன் துவங்கியதால் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி மட்டிப்பிடிக்கும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மட்டி நத்தை இனத்தை சேர்ந்த மட்டியாகும். இவற்றை வரி மட்டி, வாழி மட்டி, வழுக்கு மட்டி என பலவகைகள் உண்டு. அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய கடலோர கிராமப்பகுதிகளில் வசிக்கும் மீனவ பெண்கள் தினந்தோறும் காலை நேரங்களில் மட்டிகளை வாங்கி அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த மட்டியின் சதைப்பகுதியை வறுத்தும், அவியல் செய்தும் உண்பார்கள். வரிமட்டியைக்கொண்டு தயாரிக்கப்படும் பிரியாணி சுவையாகக் இருக்கும். அதனால் பொது மக்கள் மிக ஆர்வத்துடன் வாங்குகின்றனர். கடந்த வருடம் ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனையானது. தற்போது வரத்து குறைவாக உள்ளதால் கிலோ ரூ.200க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

Tags : Adirampattinam , Adirampattinam, taxman, sale
× RELATED மர்ம நபர்களுக்கு வலை அதிராம்பட்டினம்...