×

மர்ம நபர்களுக்கு வலை அதிராம்பட்டினம் பகுதியில் காட்டு பன்றிகளால் நெற் பயிர்கள் சேதம்

அதிராம்பட்டினம்,டிச.31: அதிராம்பட்டினம் பகுதிகளில் காட்டு பன்றிகளால் நெற் பயிர்கள் சேதம் அடைவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அதிராம்பட்டினம் அருகிலுள்ள தம்பிக்கோட்டை மறவக்காடு, கரிசக்காடு, கருங்குளம், முடுக்குக்காடு ஆகிய கிராமங்கள் அலையாத்தி காடுகளையொட்டி உள்ள பகுதிகள் ஆகும். இந்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர் சாகுபடியை இப்பகுதி விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் நெல் விவசாயம் செய்யப்பட்டு தற்போது, கதிர்கள் வந்த நிலையில் அலையாத்தி காட்டுப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் வயல் பகுதிக்குள் புகுந்து நெற்கதிர்களை தின்றும் பயிர்களை சேதப்படுத்தியும் விடுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்த நிலையில் காட்டு பன்றிகளிடமிருந்து நெற் பயிர்களை காப்பாற்ற இரவு நேரங்களில் வயல் பகுதியிலேயே முகாமிட்டு தீப்பந்தம் ஏற்றி காட்டு பன்றிகளை விரட்டிவிடும் பணியில் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கஷ்டப்பட்டு பணத்தை செலவு செய்து தற்போது கதிர் வரும் தருவாயில் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் பெருந்த நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே இனிவரும் காலங்களில் எஞ்சியுள்ள பயிர்களையாவது காப்பாற்ற வனத்துறை அதிகாரிகள் காட்டுப்பன்றிகளை விளை நிலங்களுக்குள் புகாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Adirampattinam ,
× RELATED அதிராம்பட்டினத்தில் பள்ளி மாணவிகளுக்கு ெகாரோனா தடுப்பூசி