×

மார்க்கையன்கோட்டையில் டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு

சின்னமனூர், ஏப். 4: மார்க்கையன்கோட்டையில் டிரான்ஸ்பார்மர் சீரமைக்கப்பட்டது. சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவில் எல்லோரும் பயன்பெறும் விதமாக மின்சாரத்தை தேக்கி விநியோகம் செய்ய மெகா டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ள பல மின் போஸ்ட்டுகள் வாயிலாக வீட்டு இணைப்புகள், வணிக வளாகங் கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், மேல்நிலை, நடுநிலை, துவக்கநிலை பள்ளிகள், ஹோட்டல்கள் , ஹைமாஸ் விளக்குகள், தெரு விளக்குகள் என அ னைத்திற்கும் இதிலிருந்து சப்பளை ஆகிறது.

மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவில் இந்த மெகா ட்ரான்ஸ்பர் ஓவர் லோடு காரணமாக அடிக்கடி வெடித்து தீ பிடிப்பதும் பியூஸ் போவதுமாக அடிக்கடி பாதிப்பை ஏற்பட்டு வந்தது. தற்போது கோடை காலமும் துவங்கி விட்டதால் மின்சாரம் தேவை இன்றியமையாததாக இருக்கிறது. எனவே ஓவர் லோடு பிரச்னைக்கு மின்சார வாரிய அதிகாரிகள் முற்று புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து தினகரன் கடந்த மார்ச் 20ம் தேதி படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. அதன் எதிரொலியாக சின்னமனூர் மின்வாரிய துறையினர் டிரான்ஸ்பார்மரில் தேவையான மேம்படுத்தும் பணி ஈடுபட்டனர்.

The post மார்க்கையன்கோட்டையில் டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Markayankottai ,Chinnamanur ,Dinakaran ,
× RELATED உயரழுத்த மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றம்