×

ஆலத்தூர் தாலுகா பகுதியில் ரூ.160.37 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணி: அமைச்சர் துவக்கி வைத்தார்

பாடாலூர், ஏப்.4: பாடாலூர் அருகே ஆலத்தூர் தாலுகா பகுதியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ரூ.160.37 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல உசேன் நகரம் பகுதியில் ரூ.145.37 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள், கொளத்தூர் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் என மொத்தம் ரூ.160.37 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆலத்தூர் ஒன்றிய தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல உசேன் நகரம் பகுதியில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் சார்பில் ரூ.131.00 லட்சம் மதிப்பீட்டில் கீழ உசேன் நகரம் முதல் மேல உசேன் நகரம் வரை 1,050 மீட்டர் சாலையினை தரம் உயர்த்தி மேம்பாடு செய்வதற்கான பணிகளை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து கொளத்தூர் பகுதியில் 103 உறுப்பினர்கள் கொண்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டிடம் வேண்டி முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 600 லிட்டர் பால் உற்பத்தி செய்யும் வகையிலான பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டும் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் உதவி கோட்ட பொறியாளர் ஹரிகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் தரணிதரன் (பெரம்பலூர்), கண்ணன் (தொழுதூர்) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் துரைமாணிக்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆலத்தூர் தாலுகா பகுதியில் ரூ.160.37 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணி: அமைச்சர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Alatur taluk ,Padalur ,Transport Minister ,S.C. Sivashankar ,Padalur 2 ,Dinakaran ,
× RELATED பாடாலூரில் சித்ரா பவுர்ணமியை...