×

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1 கோடி உறுப்பினர்கள் திமுகவில் சேர்ப்பு பணிகள் வடக்கு மாவட்ட செயலாளர் தொடங்கி வைத்தார்

கோபி, ஏப்.4: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘உடன்பிறப்புகளாய் இணைவோம்’ என்ற திட்டத்தில் 1 கோடி உறுப்பினர்களை திமுகவில் சேர்க்கும் பணிக்கான வாகனங்களை கோபியில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் தொடங்கி வைத்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஒரு கோடி பேரை திமுகவில் இணைக்க முடிவு செய்யப்பட்டு உறுப்பினர்களாய் இணைவோம் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தவும், திட்டம் குறித்து விளக்கவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பிரச்சார வேன் வழங்கப்பட்டு உள்ளது.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள கோபி, அந்தியூர், பவானி, பவானிசாகர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு வாகனம் வீதம் 4 பிரச்சார வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்சார வாகனங்களை கோபி இந்திரா திரையரங்கு முன்பு, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் பெருமாள்சாமி தலைமையில், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் கொடி அசைத்து தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது, ‘‘கலைஞர் நூற்றாண்டு விழாவை 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

இதில் ஈரோடு வடக்கு மாவட்டத்தில் அதிகளவு உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. திமுகவை பொறுத்தவரையில், மற்ற கட்சிகளை போன்று போலி உறுப்பினர்களை சேர்க்க முடியாது. ஒருவர் ஒருமுறை உறுப்பினராகி விட்டால் மறுமுறை சேர்க்க முடியாது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வேட்பாளர் அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒவ்வொரு தொகுதியிலும் தீவிர உறுப்பினர் சேர்க்கையை ஒவ்வொரு நிர்வாகிகளும் செய்ய வேண்டும்’’ என்றார். இதைத்தொடர்ந்து இந்த பிராச்சார வாகனங்கள் மூலமாக கோபி, பவானிசாகர், பவானி மற்றும் அந்தியூர் சட்டமன்ற தொகுதிகளில் தீவிர புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டது.

இதில் தொகுதி மேற்பார்வையாளர்கள், தீர்மானக்குழு துணைத்தலைவர் பார். இளங்கோவன், விவசாய அணி துணைத்தலைவர் தமிழ்மணி, விவசாய தொழிலாளர் அணி இணைச்செயலாளர் ராமச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி துணைச்செயலாளர் அருண்குமார், மாவட்ட பொருளாளர் கொங்கர்பாளையம் கே.கேசண்முகம், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் மணிமாறன், மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் செந்தில்நாதன், மாவட்ட துணைச்செயலாளர் கீதா நடராஜன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சிறுவலூர் வெள்ளியங்கிரி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், கோபி நகராட்சி தலைவரும் நகர செயலாளருமான என்.ஆர்.நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் சிறுவலூர் முருகன் (கோபி தெற்கு), கோரக்காட்டூர் ரவீந்திரன் (கோபி வடக்கு), செந்தில்குமார் (நம்பியூர்), பவானி சேகர் (பவானி வடக்கு), துரைராஜ் (பவானி தெற்கு), பவானி தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.பி.சண்முகசுந்தரம், சென்னிமலை, ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் குள்ளம்பாளையம் கே.கே.செல்வன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் செந்தில்குமார், கோபி நகர இளைஞரணி அமைப்பாளரும், நகராட்சி கவுன்சிலருமான விஜய்கருப்புசாமி, கொளப்பலூர் சேர்மன் அன்பரசு ஆறுமுகம், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை தலைவர் அல்லாபிச்சை, மாவட்ட பிரதிநிதிகள் வெள்ளாளபாளையம் சீனிவாசன், செங்கோட்டையன், மொடச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், நஞ்சை கோபி கணேசன், அபிராமி வெங்கிடுசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திருவேங்கடம், கோபி நகர துணைச்செயலாளர் சரோஜா பிரகாசம், கோபி நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ராகவேந்திர சுவாமி, கொளப்பலூர் பேரூராட்சி கவுன்சிலர் சதாசிவம் என்கிற மணிகண்டன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1 கோடி உறுப்பினர்கள் திமுகவில் சேர்ப்பு பணிகள் வடக்கு மாவட்ட செயலாளர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Northern District ,DMK ,Gobi ,Dinakaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி