×

நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முக்கியமானது: பிரதமர் மோடி தமிழில் கடிதம்

டெல்லி: நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முக்கியமானது என்று பிரதமர் மோடி கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களுடன் காசி நீண்ட தொடர்பை கொண்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் ஈரோட்டை சேர்ந்த யோக தட்சிணா மூர்த்தி உள்ளிட்ட பலருக்கு பிரதமர் மோடி தமிழில் கடிதம் எழுதியுள்ளார்.

காசி தமிழ்ச் சங்கமத்தின் மீது காட்டிய அன்பையும், அக்கறையும் பாராட்டுகிறேன். காசி-தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பை தமிழ்ச் சங்கமம் வெளிகாட்டியுள்ளது. நாட்டை ஒன்றிணைப்பதில் எனது முயற்சிகளை இரட்டிப்பாக்க இத்தகைய நடவடிக்கைகள் ஊக்குவிக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் நீங்கள் பங்கேற்றது ஒரே பாரதம் என்ற முழுக்கத்திற்கு வலு சேர்த்துள்ளது.

காசி தமிழ் சங்கமத்தில் உங்கள் அனுபவங்களை அறித்து கொள்ளும் போது மனதைக் கவரும் வகையில் இருக்கிறது. டங்கள் பயணத்தின் போதும், வந்து சேர்ந்த காசியிலும் நீங்கள் சிறப்பான நேரத்தைச் செலவிட்டு இருப்பதை அறிந்து நாள் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் மொழியின் அழகும், தமிழ் நாட்டின் துடிப்பான கலாச்சாரமும் காசியில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது என்று பிரதமர் மோடி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முக்கியமானது: பிரதமர் மோடி தமிழில் கடிதம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Tamil ,Delhi ,Modi ,Kashi ,Tamil Nadu ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்...