×

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு எதிரொலி...அடுத்த 15 நாளைக்கு சரக்கு விமான சேவை ரத்து...சீனாவின் சிச்சுவான் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

சீனா: இந்தியாவில் 15 நாட்களுக்கு சரக்கு விமான சேவையை ரத்து செய்வதாக சீனாவின் சிச்சுவான் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் 6 வழித்தடங்களில் 10 விமானங்களை  சிச்சுவான் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வருகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் இந்தியாவில் பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சீனாவின் மிகப் பெரிய சரக்கு போக்குவரத்து விமான நிறுவனமான சிச்சுவான் ஏர்லைன்ஸ் நிறுவனம், அடுத்து 15 நாட்களுக்கு இந்தியாவுக்கான சரக்கு விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதனால்  இந்தியா- சீனா இடையிலான சரக்கு போக்குவரத்து பாதிக்கும் சூழல் நிலவிவருகிறது. முக்கியமாக இந்தியாவிற்கு சீன அரசு ஆக்சிஜன் போன்ற மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவ தயாராக உள்ளதா அறிவித்திருந்த நிலையில், இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தனியார் நிறுவனங்களில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலவும் என்று கூறப்படுகிறது.

Tags : Corona ,India ,China ,Sichuan Airlines , Corona increase in India echoes ... Freight flights canceled for next 15 days ... China's Sichuan Airlines announces
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...